பிரபஞ்ச அழகியாக இந்திய பெண் தேர்வு! தாய்மை குறித்த என்ன கூறினார் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

0

‘மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகி போட்டியில் இந்திய பெண் அக்‌ஷரா ரெட்டி பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அக்‌ஷரா ரெட்டி,

‘மாடலிங்’ என்பது சிறுவயதில் இருந்தே என்னுடைய உணர்வாக இருந்தது. விளையாட்டு துறையில் சாதிப்பவர்களை பார்த்து, நாமும் ஏதாவது சாதித்து நாட்டுக்கு பெருமை சேர்க்கவேண்டும் என்பது என்னுடைய லட்சியம்.

அதே சமயத்தில் ‘மாடலிங்’ துறையில் இருக்கும் என்னால் நாட்டுக்கு பெருமை சேர்க்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது.

இதற்காக நான் கடுமையாக உழைத்துக்கொண்டே இருந்தேன். ‘மிஸ் சூப்பர் குளோப்’ பட்டம் வென்றது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தாய்மை குறித்து நான் கூறிய பதில் எனக்கு புள்ளிகளை ஈட்டிக் கொடுத்தது.

இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றில் 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்போது, ‘என்னுடைய குழந்தை பருவத்தை திருடிவிட்டீர்கள், என்னுடைய கனவை கலைத்துவிட்டீர்கள்’ என்று பள்ளி செல்லும் 16 வயது மாணவி உலக தலைவர்களை நோக்கி கூறினார் அவர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வி கேட்ட உடனே அனைவரும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் தான் கூறியிருப்பார் என்று நினைத்தார்கள்.

சுற்றுச்சூழலுக்காக போராடி வரும் சுவீடன் நாட்டு பெண்ணான கிரெட்டா தன்பெர்க் என்பதை அறிந்துகொண்டு, நான் அதனை விடையாக கூறினேன்.

இதற்கும் எனக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்தது. கடுமையாக உழைத்ததன் மூலம் ‘மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேன்.

தினந்தோறும் சராசரியாக 3 மணி நேரம் உடற்பயிற்சிக்காக செலவிட்டேன். உலக அழகி பட்டம் வெல்லவேண்டும் என்பதை நினைத்து தூக்கம் இல்லாமல் தவித்தேன்.

பட்டம் பெற்றதன் மூலம் என்னுடைய கனவு நனவாகி இருக்கிறது. இந்த பட்டத்தை வெல்ல என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மிகவும் உதவிகரமாக இருந்தார்கள்.

தமிழ் திரையுலகில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நல்ல நடிகர்கள் அனைவரோடும் நடிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

ஐஸ்வர்யாராய், சுஷ்மிதாஷென் ஆகிய 2 பேரையும் பார்த்து தான் எனக்கு உலக அழகி பட்டம் பெறவேண்டும் என்ற ஊக்கம் வந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு பல்வேறு பகுதியில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅடுத்தடுத்த சிக்கலில் கல்கி பகவான் கைதாவாரா?
Next articleதீபாவளி அன்று எமனுக்கு தர்ப்பணம் !