குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020 மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ஆம் பாதங்கள் !

0

மகரம் – குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020

ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ளம் கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசிகாரர்களுக்கு விரைய குரு வருமானத்திற்கு குறைவில்லை !

குரு பகவான் திருக்கணித சித்தாந்தப்படி விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18-ஆம் தேதி திங்கட்கிழமை 57.56 நாழிகைக்கு, ஆங்கிலப்படி 05-11-2019 செவ்வாய்கிழமை அதிகாலை 05.17 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி 20-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.(வாக்கிய சித்தாந்தப்படி வரும் 29-10-2019 முதல் 15-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார் ). தனுசு ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவுள்ள காலங்களில் உண்டாகக் கூடிய பலா பலன்களை தெள்ளத் தெளிவாக வழங்கி உள்ளேன்.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ஆம் பாதங்கள்

எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ளம் கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, இதுநாள் வரை ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரித்த குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 05.11.2019 முதல் 20.11.2020 வரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

சர்ப கிரகமான ராகு 6-லும், கேது 12-லும் 23.09.2020 முடிய சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெற கூடிய ஆற்றல் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். அபிவிருத்தியும் பெருகும். லாபங்களில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் தடை உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. குரு பார்வை 4, 6, 8-ஆம் இடங்களுக்கு இருப்பதால் உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு திருப்திகரமாக இருக்கும், கடன்கள் குறையும், வீடுகளை பழுதுபார்ப்பதற்காக சுப செலவு செய்ய நேரிடும்.

திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளதால் ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெற உள்ளதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் நிதானம் தேவை. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். சேமிப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பது கடினம் என்பதால் அதிக முதலீடு கொண்ட செயல்களில் ஈடுபடாமல் இருப்பது அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். உடல் சோர்வு, எதிலும் ஓர் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். தூக்கத்தில் கனவுத் தொல்லைகள் இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவற்றாலும் உடல் சோர்வடையும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும்.

குடும்பம் பொருளாதார நிலை

பணவரவுகள் சுமாராக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தனக்காரகன் குருபகவான் ஜென்ம ராசிக்கு விரயஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், வீண் விரயங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செயல்படுவது நல்லது. புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் ஏற்படும். வீடு வாகனம் வாங்கும் விஷயத்தில் கவனமாக முடிவு எடுப்பது நல்லது.

கமிஷன் ஏஜென்ஸி

குருபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர்களுக்கு லாபம் குறையும். 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் அனுகூலங்கள் உண்டாகும். கொடுத்த கடன்களையும் திரும்ப பெற முடியாமல் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். இதனால் தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். எதிலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் கையில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் எதிர்பாராத விரயங்களை சந்திப்பீர்கள். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த கடனுதவிகளும் சற்று தாமதப்படும். நவீன கருவிகள் பழுதடைந்து வீண் செலவை ஏற்படுத்தும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று நெருக்கடிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் சற்று தாமதமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இதனால் வேலை பளுவும் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயண்படுத்தி கொள்வது நல்லது.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்க நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் காப்பாற்றுவது நல்லது. கட்சி பணிக்காகவும் நிறைய செலவு செய்ய நேரிடுவதால் பொருளாதார நிலை மந்தமடையும். மறைமுக வருவாய் குறையும். பேச்சை குறைப்பது நல்லது.

விவசாயிகள்

விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ற லாபத்தை அடைய முடியாமல் விளைபொருட்கள் தேக்கமடையும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் பங்காளிகள் இடையே வீண் விரோதங்கள் ஏற்படும். பூமி மனை வாங்கும் விஷயத்தில் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கால்நடைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.

பெண்கள்

பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படுவதால் வீண் செலவுகளும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புத்திர வழியில் சில மனகவலைகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரேக்கியத்தில் சற்று பாதிப்புகள் தோன்றும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் அதிக முயற்சி எடுத்துப் படித்தால் மட்டுமே எதிர்பார்க்கும் மதிப்பெண்களை பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் படிப்பில் கவனம் தேவை. விளையாட்டுப் போட்டிகளில் ஓரளவுக்கு வெற்றியினைப் பெறுவீர்கள். அரசு வழி உதவிகள் தாமதப்படும்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 05.11.2019 முதல் 04.01.2020

உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் குரு பகவான் ஆட்சி பெற்று கேது நட்சத்திரமான மூலத்தில் சனி- கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகளை எதிர் கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் அனுகூலங்கள் கிடைக்கும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் நல்லது நடக்கும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும்.

அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையை தவிர்க்கவும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 05.01.2020 முதல் 07.03.2020

ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு யோக காரகனாகிய சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் சஞ்சரிப்பதால் எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். சர்ப்ப கிரகமான ராகு 6-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவார்கள். பணவரவுகள் ஒரளவுக்கு இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதில் தடைகள் ஏற்படும். அசையும், அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும்.

பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நற்பலனை உண்டாக்கும்.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 08.03.2020 முதல் 29.03.2020

உங்கள் ராசிக்கு 12-ல் குரு பகவான் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளையும், கணவன்- மனைவி இடையே ஒற்றுமைக் குறைவுகளையும் உண்டாக்கும் என்றாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறு உண்டாகும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை செய்வது உத்தமம். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.

குரு பகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 30.03.2020 முதல் 14.05.2020

ஜென்ம ராசியில் குரு பகவான் அதிசாரமாக சனி சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஒரளவுக்கு இருந்து குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. ராகு 6-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். கூட்டாளிகள் சற்று சாதகமற்று செயல்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும் என்பதால் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. விநாயகரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் வக்ர கதியில் 15.05.2020 முதல் 12.09.2020

குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் ராகு 6-ல் சஞ்சரிப்பதாலும் பண வரவுகள் நன்றாக இருந்து குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். கணவன் – மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். ஜென்ம ராசியில் சனி இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 13.09.2020 முதல் 30.10.2020

உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் குரு சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதாலும் எதிலும் ஏற்ற, இறக்கமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும். முடிந்தவரை பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். சர்ப கிரகமான கேது 11-ல் 23-09-2020 முதல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவி இடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும்.

உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விநாயகரை வழிபடுவது, குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 31.10.2020 முதல் 20.11.2020

உங்கள் ராசிக்கு 12-ல் குரு உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் ஏழரைச்சனியில் ஜென்மச் சனி நடப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

தொழில், வியாபாரம் செய்பபவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவினை பெறுவார்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடவும்.

பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 12-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருப்பது, குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவிப்பது, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரிப்பது, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது, அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது உத்தமம்.

ஏழரை சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழு மலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு, உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8
நிறம் – நீலம், பச்சை
கிழமை – சனி, புதன்
கல் – நீலக்கல்
திசை – மேற்கு
தெய்வம் – விநாயகர்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020 தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் !
Next articleதாம் பத்தியத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வு இந்த பழங்கள் தான்.!