அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் காட்சி நேற்றைய தினத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் குறித்த காணொளி வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களால் அவதானிக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.
குறித்த டிரைலர் காட்சியினை அவதானித்த பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் கொமடி நடிகரான ரோபோ சங்கர் ட்விட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
பிகில் ட்ரைலர் காட்சியில் மகளைப் பார்த்து கண்ணில் கண்ணீர் வழிந்தது. என் மகளுக்கு இப்படியொரு வாய்ப்பை கொடுத்ததற்கு விஜய் சாருக்கும், அட்லீ சாருக்கும் மனமார்ந்த நன்றிகள். ட்ரைலர் மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
ரோபோ சங்கரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு அவருக்கு ஆறுதல் கூறியதோடு, பாராட்டவும் செய்துள்ளனர்.