Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan Today Rasi Palan இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை – 13.10.2019

Today Rasi Palan இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை – 13.10.2019

0
576

இன்றைய பஞ்சாங்கம்
13-10-2019, புரட்டாசி 26, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 02.38 வரை பின்பு தேய்பிறை பிரதமை. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 07.52 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். கிரிவலம் செல்வது நல்லது. தனிய நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்ககூடும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

ரிஷபம்
இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

கடகம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்க நல்ல அனுகூலமான நாளாகும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நினைத்தது நிறைவேறும்.

சிம்மம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவை இல்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது, மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கன்னி
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

துலாம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளிவட்டார நட்பு கிட்டும்.

விருச்சிகம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை மன தைரியத்தோடு செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு சிறு சிறு இடையூறுகள் இருந்தாலும் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

தனுசு
இன்று உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மகரம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்
இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புக்கள் வழியாகவும் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

மீனம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும்.

Previous articleமலேசியாவில் முகேனை இன்ப அதிர்ச்சியில் அனல் பறக்கும் காணொளிக் காட்சிகள்
Next articleவார ராசி பலன் அக்டோபர் 13 முதல் 19 வரை – Vara Rasi Palan !