கரடி உடையில் காதலியை காண 2400 கிமீ பயணித்து வந்த காதலன்… காதலியை பார்த்த மறுநொடியே காதலை உதறித்தள்ளினார்… ஏன் தெரியுமா?

0

காதல் ஒரு அற்புதமான உணர்வு. இரு மனங்களின் கூடுகை தான் காதல். காதல் சாதி, மதம், இனம், மொழி, நாடு கடந்து உதயமாகக் கூடியது. அந்தவகையில் ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, சீனப் பெண்ணின் மீது காதல் மலர்ந்தது. காதலியை சந்திக்க கடல் கடந்து வந்தவர், காதலியை சந்தித்த கனம் நொறுங்கிப் போனார். அப்படி என்ன நடந்தது என்கிறீர்களா?

ஜப்பான் இளைஞர் சீனப்பெண் மீது காதல் வயப்பட்டார். அவர் தன் விருப்பத்தைச் சொல்லவே சீனப்பெண்ணும் ஐ டூ லவ் யூ என உருகினார். தொடர்ந்து இவர்கள் இதற்கு முன்னரே சிலமுறை சந்தித்துள்ளனர். தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ் அப் உதவியோடு இவர்கள் காதல் விறு, விறுவென வளர்ந்தது.

இந்நிலையில் காதலிக்கு சொல்லாமல் திடீர் என அவர் முன்னால் சர்ப்ரைஸாக போய் நிற்க 2400 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சீனா வந்தார் ஜப்பான் இளைஞர். அப்போது தன் காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க, தன் முகம், உடல்களை மறைத்து கரடி பொம்மை வேசத்தில் அவர் முன்பு போய் நின்றார். ஆனால் அந்த காதலியோ அப்போது வேறு ஒரு ஆணுடன் மிக நெருக்கமாக இருந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த காதலன் உடனே தன் முகமூடியை கழட்டி காதலி முன்னாள் காட்டிவிட்டு கோபத்தோடு வெளியேறுகிறார். ஆனால் காதலி சமாதானம் செய்ய முயன்றும் அவர் சமாதானம் ஆகவில்லை. முகம் தெரியாமல் காதல் மலர்ந்ததால் வந்த வினை என்று, அந்த இளைஞர் மீது பரிதாபம் கொண்டு ஆறுதல் வார்த்தை கூறிவருகின்றனர் நெட்டிசன்கள். இந்த நிகழ்வை அந்த இளைஞர் சில படங்களோடு வேதனை ததும்ப தன் சோசியல் மீடீயா பக்கத்தில் போட்டிருந்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅடேங்கப்பா இப்படியெல்லாமா கடத்துவாங்க? பிடிபட்ட பாதிமொட்டை இளைஞரால் பரபரப்பு..!
Next articleஇவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும்போது அது உங்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் !