Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 07.10.2019 !

0

இன்றைய பஞ்சாங்கம்
07-10-2019, புரட்டாசி 20, திங்கட்கிழமை, நவமி திதி பகல் 12.38 வரை பின்பு வளர்பிறை தசமி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 05.25 வரை பின்பு திருவோணம். மரணயோகம் மாலை 05.25 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை. பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரை, மதியம் 03.00 மணி முதல் 04.00 மணி வரை, மாலை06.00 மணி முதல் 08.00 மணி வரை.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் – 07.10.2019
மேஷம்
இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும்.

ரிஷபம்
இன்று உடல்நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கடகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். உத்தியோக நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

கன்னி
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. சகோதர சகோதரி வழியில் உதவிகள் கிடைக்கும்.

துலாம்
இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். அரசு துறை ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும்.

தனுசு
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களே தடையாக இருப்பார்கள். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அனுகூலம் கிட்டும்.

மகரம்
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை பலப்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். மன அமைதி இருக்கும்.

கும்பம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளால் மனசங்கடங்கள் உண்டாகும். கையிருப்பு குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த நெருகக்கடிகள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மீனம்
இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅட்டகாசமான நியூலுக்கில் அஜித்! வைரலாகும் புகைப்படங்கள் !
Next articleவயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் மணத்தக்காளி கீரை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?