பிக்பாஸ் சீசன் 3 நிறைவு பெறுவதற்கு இன்னும் ஒரு வாரமே மீதம் உள்ளது. டைட்டில் வெல்லப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருந்த நிலையில், அதில் வாக்குகள் அடிப்படையில் தர்ஷன் நேற்று வெளியில் அனுப்பப்பட்டார்.
அவருக்கு வாக்கு குறைந்தது எப்படி என முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பேசியுள்ளார். “வாக்குகளில் பின்தங்கிய போட்டியாளர்களுக்கு ஓட்டு போட்டவர்கள், strong போட்டியாளரை மறந்துவிட்டார்கள். அவருக்கு மற்றவர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நினைத்து இப்படி செய்திருக்கலாம். ஆனது ஆகட்டும், தற்போது சரியான வெற்றியாளரையாவது தேர்ந்தெடுப்போம்” என கூறியுள்ளார் அவர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: