இன்றைய ராசிபலன் 26.4.2018
26.4.2018 வியாழக்கிழமை விளம்பி வருடம் சித்திரை மாதம் 13-ம் நாள்.
வளர்பிறை ஏகாதசி திதி காலை 10.04 வரை பிறகு துவாதசி. பூர நட்சத்திரம் பிற்பகல் 3 வரை பிறகு உத்திரம். யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3 வரை பிறகு மரணயோகம்.
குளிகை: 9:00 – 10:30
சூலம்: தெற்கு.
பொது: திருப்பனந்தாள் திருக்கல்யாணம், இரவு கோரதக் காட்சி, திருமலை திருப்பதி பத்மாவதி தாயார் ஸ்ரீ நிவாசப் பெருமாள் பரிணய உற்சவ முடிவு, திருக்கழுக்குன்றம் திருத்தேர், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் திருக்கல்யாணம், ரிஷப வாகனம்.
பரிகாரம்: நல்லெண்ணெய்.
நல்ல நேரம் 9-12, 4-7, 8-9.
எமகண்டம் காலை மணி 6.00-7.30
இராகு காலம் மதியம் மணி 1.30-3.00
மேஷம் : முடிவு
ரிஷபம் : நம்பிக்கை
மிதுனம் : பேச்சு
கடகம் : முயற்சி
சிம்மம் : எதிர்ப்பு
கன்னி : ஆரோக்யமின்மை
துலாம் : மரியாதை
விருச்சிகம் : மனஉறுதி
தனுசு : உதவி
மகரம் : பகை
கும்பம் : சந்திப்பு
மீனம் : நன்மை
மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் அன்பு தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.
ரிஷபம்: பழைய சிக்கல் களை தீர்ப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
மிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
கடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். முகப்பொலிவுக் கூடும். உறவினர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். சாதாரணமாக பேசப் போய் சண்டையில் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
கன்னி: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
துலாம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். இனிமையான நாள்.
விருச்சிகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.
தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நேர்மறை சிந்தனைகள் உருவாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
கும்பம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அமோகமான நாள்.





