Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிபலன்25.4.2018!

இன்றைய ராசிபலன்25.4.2018!

0
759

இன்றைய ராசிபலன்25.4.2018

25.4.2018 புதன்கிழமை விளம்பி வருடம் சித்திரை மாதம் 12-ம் நாள்.
வளர்பிறை தசமி திதி காலை 11.50 வரை பிறகு ஏகாதசி. மக நட்சத்திரம் பிற்பகல் 3.58 வரை பிறகு பூரம். யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3.58 வரை பிறகு அமிர்தயோகம். முகூர்த்த நாள்.
குளிகை: 10:30 – 12:00
சூலம்: வடக்கு.
பொது: திருக்கடவூர் காலசங்காரம், சீர்காழி, திருச்சி திருக்கல்யாணம், சிங்கிரிகோயில் நரசிம்மர் கருட சேவை, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலம் இரவு யாளி வாகனத்தில் புறப்பாடு.
பரிகாரம்: பால்.

நல்ல நேரம் 6-7.30, 9-10, 1.30-3, 4-5, 7-10.
எமகண்டம் காலை மணி 7.30-9.00
இராகு காலம் மதியம் மணி 12.00-1.30

மேஷம் : வசதி
ரிஷபம் : வெற்றி
மிதுனம் : சிந்தனை
கடகம் : உற்சாகம்
சிம்மம் : விரயம்
கன்னி : கவனம்
துலாம் : வருமானம்
விருச்சிகம் : மேன்மை
தனுசு : சுறுசுறுப்பு
மகரம் : இழப்பு
கும்பம் : காரியம்
மீனம் : அனுபவம்

மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

ரிஷபம்: பால்ய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்
தில் ஒப்பந்தம் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கன்னி: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் பரிவாக பேசுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

துலாம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பெற்றோரின் ஆதரவுபபெருகும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சிறப்பான நாள்.

விருச்சிகம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். நன்றி மறந்த சிலரைநினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கும்பம்: சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பர். திறமைகள் வெளிப்படும் நாள்.

மீனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

Previous articleஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே!
Next articleபிரச்னைகளுக்கும் நிவாரணி – ஓம் சிவசிவ ஓம் !