டோனியின் ரன் அவுட்டைக் கண்டு புகைப்படக் கலைஞர் கண்ணீர் விட்டு அழுத புகைப்படத்தின் உண்மை என்ன என்பது வெளியாகியுள்ளது.

0

நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் டோனியின் ரன் அவுட்டைக் கண்டு புகைப்படக் கலைஞர் கண்ணீர் விட்டு அழுத புகைப்படத்தின் உண்மை என்ன என்பது வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியின், பரபரப்பான இறுதிக் கட்டத்தில் டோனி ரன் அவுட்டானது, இந்திய ரசிகர்களை கதிகலங்க வைத்தது.

அதுமட்டுமின்றி அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகுவதால், வீடியோவைக் கண்டு ரசிகர்களும், கண்கலங்கி வருகின்றனர்.

இந்நிலையில் டோனியின் ரன் அவுட்டைப் பார்த்த போட்ட எடுத்த புகைப்பட கலைஞர் கண்ணீர் விட்டு அழுததாக கூறி புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது.

அதன் பின் அது என்ன என்று ஆராய்ந்து பார்த்த போது, அவர் ஈராக்கைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் எனவும் அவரின் பெயர் Mohammed al-Azzawi என்பதும் தெரியவந்துள்ளது.

அவர் டோனியின் ரன் அவுட் புகைப்படத்தை எடுக்கும் போது கண்கலங்கவில்லை, எனவும் கல்பந்தாட்ட போட்டியின் புகைப்படம் எடுக்கும் போது கண்ணீர்விட்டது தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleலொஸ்லியாவிடம் அனைவரது முன்னிலையில் காதலை சொன்ன கவின்! சாக்‌ஷியின் ரியாக்‌ஷன் இவ்வளவு தானா !
Next articleபிக்பாஸில் வழங்கப்படும் சம்பளத்தை பற்றி உளறிய வனிதா- தண்டனை பெறுவாரா !