குழந்தையை பள்ளியில் சேர்க்க சென்ற தாய்! 5 நாட்கள் தொடர் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரன்!

0

கர்நாடகாவில் மகனை பள்ளியில் சேர்க்க கல்வியலாளர் ஒருவரின் உதவியை நாடிய தாயை அந்த நபர் 5 நாட்கள் தொடர் பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் தாய் ஒருவர் தனது மகனை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என எண்ணி நாம்நகரில் உள்ள கன்னட சிரிசேன அமைப்பைச் சேர்ந்த சமூக சேவகர் என்ற போர்வையில் கல்வியலாளராக உலாவரும் நபர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த அந்த நபர், அந்த தாயிடம், வீட்டில் தங்கி வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் எனக் கூற, அதற்கு அந்த பெண் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் 5 நாட்கள் அந்த பெண்ணை தன் வீட்டிலேயே வைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துக்கொண்டு அந்தப்பெண்ணை மிரட்டியுள்ளார்.

மேலும் இதைப்பற்றி வெளியில் சொன்னால் வீடியோவை இணையத்தில் பதிவேற்றி விடுவதாகக் கூறியுள்ளார். ஆனாலும் அந்தப் பெண் தைரியமாக போலிஸில் புகார் அளிக்க சம்மந்தப்படட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவானில் பறந்து கொண்டிருந்த விமானம்! பெட்ரோல் டேங்குகளை கழற்றிவிட்ட விமானி! பரபரப்பு வீடியோ!
Next articleகாதில் உயிருடன் இருந்த பல்லி! பெண் மருத்துவரின் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் இது தானாம்!