கீழ் திசை என்பது கிழக்கு திசையைத் தான் சொல்வார்கள்.
கெட்டு முறிந்து கிழக்கில் போ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு கிழக்கில் போனால் பிழைத்துக் கொள்ளலாம் என்பதுதான் பழமொழியின் அர்த்தம்.
கீழ் திசை என்பது வலுவான திசை. மேலான திசை என்றால் மேற்கு திசை. கீழ் திசை என்றால் வலுவிழந்த திசை என்று அர்த்தம் அல்ல. கீழ் திசை என்றால் எல்லாவற்றையும் இழந்து கீழே போனால், எல்லா செல்வங்களையும் பெற்று மேலே வர முடியும் என்று கூறப்படுவதால்தான் கீழ் திசை என்று சொல்லப்படுகிறது.
அதனால்தான் எல்லாவற்றையும் இழந்த பிறகும் பிழைக்க வழியில்லை என்று நினைக்காதே, கிழக்கு திசை போனால் உனக்கு எல்லாம் கிடைத்துவிடும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் கெட்டு முறிந்து கிழக்கில் போ என்று சொல்லப்பட்டது.
கீழ் திசையில் செல்லக் கூடாது என்று சொல்வது தவறான அர்த்தம்.




