ஜோதிடத்தைப் பொருத்த வரை சனி, குருவுக்கு மட்டுமே ராஜ கிரகங்கத்திற்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தீர்கள். இதில், ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஒரே வீட்டில் இந்த 2 கிரகங்களும் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.
குரு, சனி சேர்ந்திருந்தால் அதனை குரு சண்டாள யோகம் என்று கூறுவர். பொதுவாக வேதம், உபநிடங்கள் இதற்கெல்லாம் உரிய கிரகம் குரு. அதேபோல் சனி சத்ரிய கிரகம் என்று கூறுவர். எனவே, குரு-சனி சேர்க்கை பெற்றவர்கள் அனைத்திலும் திறமையானவர்களாகத் திகழ்வர்.
ஆனால் எந்த லக்னத்திற்கு குரு-சனி ஏற்றது என்பதையும் இங்கே கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனென்றால் மேஷ லக்னத்திற்கு குரு சண்டாள யோகம் ஒரு பலனையும் அளிக்காது. நல்ல பலனைத் தராது என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
இதேபோல் ரிஷப லக்னத்திற்கு இந்த யோகம் இருந்தால் சிறு வயதிலேயே பெற்றோர் உயிரிழப்பது அல்லது தகப்பானருக்கு சில இடர்பாடுகள் ஏற்படுவது.
மிதுன லக்னத்திற்கு குரு சண்டாள யோகம் இருந்தால் திருமணத் தடைகள் ஏற்படும். திருமணத்திற்கு பின்னரும் மனைவி தரப்பில் சில சிக்கல்கள் காணப்படும்.
கடகம் மற்றும் சிம்ம லக்னத்திற்கு குரு சண்டாள யோகம் அமைந்தால் உத்தமமான மனைவி, மனைவி அமைந்த பின் யோகப் பலன்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.




