கோபத்திற்கும், பழிவாங்கும் குணத்திற்கும் ஜாதக ரீதியாக தொடர்பு உண்டா!

0

ஒவ்வொரு ஜாதகருக்கும் லக்னம் உண்டு. உதாரணமாக கன்னி லக்னத்தில் ஒருவர் பிறக்கிறார் என்றால் அவருக்கு 6வது வீட்டில் எந்த கிரகம் உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் 6வது இடம்தான் எதிரிகள், கடன், நோய் ஆகியவற்றிற்கு உரிய இடம். 6ஆம் வீட்டிற்கு உரிய கிரகம் நல்ல முறையில், வலிமை அடையாமல் பலவீனமாக இருந்தால் மறப்போம்… மன்னிப்போம்… என்ற மனநிலையுடன் அந்த ஜாதகர் இருப்பார். இதேபோல் 6ஆம் வீட்டிற்கு உரிய கிரகத்தை சுபகிரகம் பார்த்தலும், அந்த ஜாதகர் மற்றவர் செய்த தவறுகளை மன்னித்து ஏற்றுக் கொள்பவராக திகழ்வார்.

ஆனால் 6ஆம் வீட்டிற்குரிய கிரகம் வலுவாக அமர்ந்திருந்தாலோ அல்லது 6க்கு உரிய கிரகம் அதன் சொந்த வீடு, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தாலும், 6க்கு உரிய கிரகம் தன் வீட்டைப் தானே பார்த்தாலும் அந்த ஜாதகருக்கு பழிவாங்கும் குணம் இருந்து கொண்டே இருக்கும்.

பொதுவாக 6ஆம் வீட்டிற்கு உரிய கிரகம் வலுவாக இருந்தால் அந்த ஜாதகர் மிகுந்த பழிவாங்கும் குணம் உடையவர்களாக இருப்பர். 6ஆம் இடத்திற்கு உரிய கிரகம் வலுவிழந்து காணப்பட்டால் அந்த ஜாதகர் மறப்போம்… மன்னிப்போம் என்ற மனநிலையுடன் இருப்பார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒவ்வொரு ராசியும் அதற்கான ஜோதிட பண்புகளும்!
Next articleஐந்தாவது இடத்தில் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால்!