ஒவ்வொரு ராசியும் அதற்கான ஜோதிட பண்புகளும்!

0

மேஷம்:
இந்த ராசிக்காரர்களில் சிலர் உடனடியாக செயல்படக் கூடியவர்களாகத் திகழ்வர். ஆனால் அதே ராசிக்காரர்களில் வேறு சிலர் தாமதமாக செயல்படக் கூடியவர்களாக இருப்பர். இவர்கள் சராசரி உயரம் உடையவர்கள். ஆனால் இதில் சற்று குறைவான உயரத்துடன் (குள்ளமாக) காணப்படுபவர்களிடம் ராஜதந்திரம் இருக்கும்.

இவர்கள் எதிரியை உடனடியாக தாக்க மாட்டார்கள். நிதானமாக யோசித்து செயல்படுவர். இதற்கு மேஷராசியின் சின்னமான ஆட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆடு தாக்குதலுக்கு தயாராவதற்கு முன்பாக பின்னோக்கிச் சென்று, அதிரடியாக ஓடி வந்து தாக்கும். அதுபோல்தான் இவர்களின் இயல்பும் இருக்கும்.

மேஷ ராசிக்காரர்கள் பலரைப் பார்த்த அனுபவத்தில் கூறுகிறேன், ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்தால் அதனை அப்போதே மறந்துவிட மாட்டார்கள். 6 அல்லது 8 மாத காலம் தீவிரமாக சிந்தித்து செயல்பட்டு, மீண்டும் அதே செயலில் இறங்கி வெற்றி பெறுவார்கள்.

ரிஷபம்:
நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ அதனை உடனடியாக முடிக்க வேண்டும் என்றுதான் இந்த ராசிக்காரர்கள் விரும்புவர். தவறு செய்ய யோசிக்கும் குணமுடைய இவர்கள், பழைய சம்பவங்களை மீண்டும் நினைவில் நிறுத்தி யோசிப்பர்.

இவர்களில் ஒருசிலர் தங்களது செயலுக்காக வருந்தவும் செய்வர். உதாரணமாக அந்த நேரத்தில் நாம் அவரை எதிர்த்துப் பேசியிருக்கக் கூடாது அல்லது அவரை அடித்திருக்கக் கூடாது என்று தமது செயலை நினைத்து வருந்துவர். நேரில் பார்த்தால் அவரிடம் மன்னிப்புக் கேட்டு விடலாம் என முடிவு செய்வர். ஆனால் அந்த நபரை நேரில் பார்த்தால் மன்னிப்புக் கேட்க மாட்டார்கள்.

ஏனென்றால் அந்த சந்திப்பின் போது, “நீ ஒன்றைக் கூறினாய், நான் ஒன்றைக் கூறினேன். எனவே தவறுக்கு தவறு சரியாகி விட்டது” என்று விட்டுக் கொடுக்காமல் பேசுவர்.

மிதுனம்/கன்னி:
இந்த 2 ராசிகளும் புதனுக்கு உரியவை. இந்த ராசிக்காரர்களில் பெரும்பாலானவர்கள் சாத்வீகத்தன்மை உடையவர்களாக இருப்பர். எது நடந்தாலும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடுவர்.

ஒரு திருடன் இவர்களின் பர்சை திருடிச் சென்றாலும், அவனை துரத்திச் சென்று, “அதில் நூறு ரூபாய்தான் இருக்கிறது. உனக்கு போதவில்லை என்றால் இந்தா இதை வைத்துக்கொள்” என்று மேலும் ஒரு நூறு ரூபாயை கொடுத்துவிட்டு வருபவர்கள் இந்த ராசிக்காரர்கள்.

அதேவேளையில், தங்களது உரிமைகளை இந்த ராசிக்காரர்கள் எளிதில் விட்டுத்தர மாட்டார்கள். ஆனால் விட்டுத்தர வேண்டும் என்ற நிலை வரும் போது இவர்களே விட்டுக் கொடுப்பர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசெவ்வாய் தோஷம் உள்ளவர்களின் காம உணர்வுகள் பற்றி!
Next articleகோபத்திற்கும், பழிவாங்கும் குணத்திற்கும் ஜாதக ரீதியாக தொடர்பு உண்டா!