ஜாதி என்பதற்கு ஜோதிட அடிப்படை இருக்கிறதா!

0

ஒருவர் இந்த ஜாதி என்று முகத்தை வைத்தோ, ரத்தத்தை வைத்தோ கூற முடியாது. அப்படியே அவரது பழக்கவழக்கங்களை வைத்துக் கூறினாலும், ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்தவர் என்று மட்டுமே கூற முடியும். அவரது சாதி அல்லது மதத்தை குறிப்பிட முடியாது. சாதி என்பதற்கு ஜோதிட ரீதியாக அடிப்படை இருக்கிறதா? இல்லையா?

ஜோதிட நூல்களின் அடிப்படையில் அனைத்து ஜாதிகளும் பிரித்தே வைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக புதன் என்றால் வைசியன், குரு என்றால் பிராமணன், சூரியன் என்றால் சத்ரியன் என விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது. மேலும் வைசியன் என்றால் அவரது குணங்கள் என்ன என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு ஜாதகத்தை பார்க்கும் போது, அக்ரஹாரத்தில் பிறந்த குப்பத்துப் பையனின் ஜாதகமாக இருக்கிறதே என்று குறிப்பிடுவேன். ஏனென்றால் அவரது நடவடிக்கைகள், குணங்கள் அதுபோல் அமைந்திருக்கும்.

மற்றொரு ஜாதகத்தைப் பார்க்கும் போது, சேற்றில் முளைத்த செந்தாமரையாக இருக்கிறதே எனக் கூறியுள்ளேன். அதாவது பெற்றோர் பழக்க வழக்கங்கள், ஒழுக்கம், உணவு முறை ஆகியவற்றல் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், அவர்கள் குடும்பத்தில் பிறந்த குழந்தையின் ஜாதகம் சிறப்பாக இருந்ததால், அக்குழந்தையை நல்ல முறையில் வளர்க்கப் பாருங்கள் என்பேன்.

கிரகத்தைப் பொறுத்தே குணம்!
எந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் ஒருவர் பிறந்திருக்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது குணாதிசயங்கள் அமையும். கஞ்சமான குடும்பத்தில் வாரிக் கொடுக்கும் தன்மை உடையை குழந்தை பிறந்திருக்கும். உதாரணத்திற்கு, சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நாளைக்கு தேவை என்று எதையும் தங்களுக்காக வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

குணநலன்களை வைத்து கிரகங்களுக்கு ஜாதி கொடுக்கப்பட்டுள்ளதே தவிர, செய்யும் தொழில் அல்லது அவரின் நிறம் உள்ளிட்டவற்றை வைத்து அவற்றிக்கு ஜாதி அந்தஸ்து கொடுக்கப்படவில்லை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறதே ஏன்!
Next articleசெவ்வாய்தோஷம் உள்ள பெண்! தோஷம் இல்லாத ஜாதகரை திருமணம் செய்யலாமா!