Home Jaffna News பாடசாலை மாணவியின் விபரீத முடிவு! நடந்தது என்ன?

பாடசாலை மாணவியின் விபரீத முடிவு! நடந்தது என்ன?

0
476

ஹட்டன் – டிக்கோயா பிரதேசத்தில் 11 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ள நிலையில் , அவரை மீட்டுள்ள பிரதேசவாசிகள் டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதால் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நோர்வுட் காவற்துறையினர் தெரிவித்தனர்.

ஹட்டன் , டிக்கோயா வனராஜா தோட்டத்தை சேர்ந்த இந்த மாணவி அவரின் வீட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அறையொன்றில் இன்று காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்த முயற்சித்துள்ளார்.

இந்த சிறுமி நோர்வுட் பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னணி பாடசாலையொன்றில் தரம் 6இல் கல்வி கற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நோர்வுட் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகுழந்தை பிறந்த பிறகு குண்டாகி விட்டீர்களா? ஒல்லியாக இதை மட்டும் பண்ணுங்க போதும்..!
Next articleதினமும் சிறுநீர் கழிக்கும் போது இதனை கவனியுங்கள்? தடுக்கா விட்டால் ஆபத்து நிச்சயம்!