Home Jaffna News பலத்தபாதுகாப்புடன் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் போராளிகள்!

பலத்தபாதுகாப்புடன் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் போராளிகள்!

0
371

ஸ்ரீலங்கா இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர் இன்று காலை வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் ஆகிய இருவரும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த 15 இராணுவத்தினரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2014 ஆண்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் தடுத்துவைக்கப்பட்டனர்.

நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களது வழக்கு இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்திருந்தது. அதன் பின்னர் 2017 ஆண்டு திருத்தப்பட்ட குற்றப்பத்திரத்தின் மூலம் இராசதுரை திருவருள் என்ற முன்னாள் போராளியும் குறித்த வழக்குடன் இணைக்கப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவர்களது வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. இதனை கண்டித்தும் தமது வழக்கை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரியும் மூவரும் அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் பலனாக குறித்த வழக்கு மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு நீண்ட காலமாக உள்ளமையினால் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தப்படுத்தி தினமும் வழக்கை விசாரணை செய்து முடிவுக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தவகையில் இன்று மூன்றுஅரசியல் கைதிகளும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அழைத்து வரப்பட்டபோது குறித்த வழக்கு பொய்யான வழக்கு எனவும் நீதிமன்றத்தில் தமக்கு நம்பிக்கை உள்ளதால் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Previous articleஅனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி! குவியும் பாராட்டு!
Next articleஅவர் மீது க்ரஷ்! நடிகை ஐஸ்வர்யா ஓபன்டாக்! லிப்கிஸ் ரொம்ப நல்லது! இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன்!