Home thatstamil one india tamil oneindia tamil 500 மிருகங்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய காஜல் அகர்வால்! வைரலாகும் வீடியோ!

500 மிருகங்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய காஜல் அகர்வால்! வைரலாகும் வீடியோ!

0
752

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். இதுவரை விஜய், அஜித், சூர்யா, விஷால் என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் விஷால் நடித்துள்ளார் காஜல். சமீபத்தில் இவரது பிறந்தநாளை வித்யாசமான முறையில் கொண்டாடியுள்ளார்.

கடந்த ஜூன் 19-ஆம் தேதி நடிகை காஜல் அகர்வால் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார் இதற்காக துபாயில் உள்ள தனியார் பூங்காவிற்கு சென்று அங்கே 500க்கும் மேற்பட்ட விலங்குகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

மான், ஒட்டகம், கரடி குட்டி போன்ற விலங்குகளுக்கு தனது கையால் உணவளித்து உள்ள காஜல் அங்கு இருக்கும் இரண்டு அரிதான வெள்ளை சிங்கங்களுடன் கூண்டுக்கு வெளியே ஓடியவாறு விளையாடி உள்ளார் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. காஜல் அகர்வால் தற்போது ஜெயம் ரவியுடன் கோமாளி படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்தியன் படத்தில் கமலுக்கு ஜோடியாக ஒப்பந்தமானார் காஜல். இதற்காக மர்மக்கலைகளை கூட பயின்றுவந்தார். ஆனால், இந்தியன் 2 படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

Previous articleபறந்து கொண்டிருந்த விமானத்தில் கசமுசா செய்த இளம்ஜோடிகள்! அதிர்ந்துபோன விமான பணிப்பெண்கள்!
Next articleகடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்! யார்க்கரால் ஸ்டம்புகளை தெறிக்க விட்ட ஷமி வீடியோ!