Home thatstamil one india tamil oneindia tamil பேருந்தில் உறங்கி கொண்டிருந்த பெண்ணின் மேல் கை வைத்து சில்மிஷம் செய்த ஓட்டுநர்! அதிர்ந்து போன...

பேருந்தில் உறங்கி கொண்டிருந்த பெண்ணின் மேல் கை வைத்து சில்மிஷம் செய்த ஓட்டுநர்! அதிர்ந்து போன பயணிகள்!

0
761

தனியார் ஓடும் பேருந்தில் உறக்கத்தில் இருந்த பெண்ணுக்கு ஓட்டுநர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

கேரளாவில் புகழ்பெற்ற கல்லடா டிராவல்ஸ் பேருந்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சியில் இருந்து பெங்களூருவில் பெண் ஒருவர் பயணம் மேற்கொண்டார். படுக்கை வசதி கொண்ட ஏசி இருந்தில் இரவு பயணம் என்பதால் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். எப்போது தொலைதூர பயணம் என்பதால் இரண்டு டிரைவர்கள் இருப்பார்கள்.

பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர்
இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மற்றும் கொல்லம் இடையே பேருந்து சென்று கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணின் உடலை ஒருவர் சீண்டுவது போல உணர்ந்துள்ளார். முதலில் தெரியாமல் பட்டிருக்கும் என்று அந்த பெண் நினைத்துள்ளார்.

பிறகு அந்த நபர் பெண்ணின் ஆடைக்குள் கைகளை விட்டு சில்மிஷல் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக எழுந்து அலறியுள்ளார். இதனையடுத்து, சக பயணிகள் எழுந்து பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லடா டிராவல்ஸ் ஓட்டுநர் ஜான்சனை சரமாரியாக தாக்கினர்.

இதுதொடர்பாக பெண் காவல் நிலையத்தில் கல்லடா டிராவல்ஸ் ஓட்டுநர் மீது புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் கல்லடா டிராவல்ஸ் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி மேற்கொண்டனர். அதன் பிறகு கோட்டயத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஜான்சனை போலீசார் கைது செய்தனர்.

இவர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் பயணிகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..

Previous articleமீம் கிரியேட்டர்களுக்கு மோடி கொடுத்த விருந்து! அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த தமிழிசை! வைரலாகும் காட்சி!
Next articleசுகாதாரம் பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்க!