பிரதமர் மோடியின் வேண்டுகோளை அடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் திகதி கடைபிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி நேற்று இந்தியாவின் பல்வேறு இடங்களில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்த வருடம் இதய நலனுக்கான யோகாசனம் என்ற கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இதேவேளை, அமைச்சர்கள், நடிகை தன்ஷிகா உள்ளிட்ட பலருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசையுடன் யோகா செய்த காட்சிகளும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் மீம் கிரியேட்டர்ஸ் சில காணொளிகளை வெளியிட்டுள்ளனர். இது சமூகவாசிகளை ரசிக்க வைக்க எடுக்கப்பட்ட காட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.




