நடிகை அமலாபால் வித்தியாசமான கதைகளங்களை தேடிப்பிடித்து தேர்ந்தெடுத்து நடிப்பவர். அவரின் நடிப்பில் அடுத்ததாக ஆடை படம் வெளியாகவுள்ளது.
இதன் போஸ்டர் கடந்த வருடம் வெளியாகி சில சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் அவர் ஆடையில்லாமல் டாய்லட் பேப்பரை உடையாக சுற்றியிருந்தார்.
இப்படத்தில் அமலா பால் ஆடையில்லாமல் நடித்துள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. அண்மையில் வந்த இப்படத்தின் டீசரிலும் அக்காட்சிகள் வெளியானது. தற்போது 6 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
மேயாத மான் பட புகழ் இயக்குனர் ரத்ன குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.




