உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் பகுதியை சேர்ந்த மான் பால் சிங் என்பவருக்கு சாமியார் சந்தோஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக கஞ்சா அடித்து வரும் நிலையில், “உன்னை பணக்காரனாக நான் மாற்றிவிடுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை” என சாமியார் கூறியுள்ளார்.
அந்த நிபந்தனை என்னவென்றால், உனது மனைவி என்னுடன் உறவு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தனது மனைவியை, மான் பால் சாமியாருடன் உறவு கொள்ள வற்புறுத்தி உள்ளார். அவரது மனைவி மான் பால் இவ்வாறு கூறுவது குறித்து அவரது சகோதரனிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கங்கையில் பூஜை என கூறி அழைத்துச் சென்று தனது மனைவியை மான் பால் நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இந்த சாமியாரை ஏற்கனவே ஹெராயின் வைத்திருந்த குற்றத்திற்காக போலீசாரால் தேடப்பட்டு வந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.