திருமண கோலத்தில் அழகிய மகளை மடியில் ஏந்திக் கொண்டு கதறும் தந்தை! மகிழ்சியில் இருந்த உறவுகள் நொடியில் மாறிய காட்சி!

0

திருமணத்தின் போது மகளை கன்னிகாதானம் செய்து கொடுத்த தந்தை கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனை பார்த்த உறவுகளும் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்பார்கள் சிலர். ஆனால், தானங்களிலேயே மிகப் பெரிதாக, மகா புண்ணியமாக, உயர்ந்த தானமாக கன்னிகாதானத்தைத் தான் சொல்லவேண்டும்.

திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர்தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆணுக்கு அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்று போற்றுகிறார்கள்.

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.

ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால்,

அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவர். இந்த காட்சியை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் கண்ணீர் வரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article2ம் உலகப்போரில் பிரிந்த காதலியை! 75 வருடங்களுக்கு பின் சந்தித்த வீரர்! நெகிழ்ச்சி சம்பவம்!
Next articleஇலங்கை தமிழரை மணந்து கனடாவில் வசிக்கும் நடிகை ரம்பாவின் தற்போதைய நிலை என்ன! வெளியான கலக்கல் புகைப்படங்கள்!