இலங்கையை சேர்ந்த பெண்ணுடன் இந்திய இளைஞருக்கு டுவிட்டர் பதிவின் மூலம் காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கோவிந்த் பிரகாஷ் (26). இவர் கடந்த 2015-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்ட ஒரு டுவீட்டை லைக் செய்தார்.
அதே டுவீட்டை இலங்கையை சேர்ந்த ஹன்சினி எதிர்சின்கே (25) என்ற இளம்பெண்ணும் லைக் செய்தார்.
பின்னர் ஹன்சினியின் டுவிட்டர் பக்கத்தில் சென்று அவருடன் முதலில் நட்பாக பேசினார் கோவிந்த். பின்னர் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி அது காதலாக மாறியது.
இரண்டு ஆண்டுகள் கழித்து 2017ல் ஹன்சினி இந்தியாவுக்கு வந்த நிலையில் முதல்முறையாக பிரகாஷை சந்தித்தார்.
இதையடுத்து இந்தியாவில் தங்கி முதுகலை பட்டப்படிப்பை படித்த ஹன்சினி தனது பெற்றோரிடம் தனது காதல் குறித்து பேசினார்.
இந்நிலையில் காதலுக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் திகதி மத்திய பிரதேசத்தில் கோவிந்த் – ஹன்சினி திருமணம் நடைபெற்றது.
மணப்பெண் உறவினர்கள் 15 பேர் திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில், மணமகன் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
தற்போது சண்டிகர் நகரில் புதுமண தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் கோவிந்த் – ஹன்சினியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.