Home thatstamil one india tamil oneindia tamil vilayattu seithigal ரசிகர்களை கலங்க வைத்த யுவராஜ் சிங்! உணர்ச்சிகர வீடியோ!

ரசிகர்களை கலங்க வைத்த யுவராஜ் சிங்! உணர்ச்சிகர வீடியோ!

0
1310

யுவராஜ் சிங் தனது கிரிக்கெட் ஆடைக்கு விடை கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து யுவராஜ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.

குறித்த வீடியோவில் யுவராஜ் 12ஆம் எண் போட்ட தனது கிரிக்கெட் ஆடையை தொட்டுப்பார்த்து விடை கொடுக்கிறார்.

அந்த வீடியோ காண்பதற்கு உருக்கமாக இருக்கிறது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள கிரிக்கெட் ரசிகர்கள், யுவராஜ் சிங்கை நினைக்கும்போது கண்ணீர் வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, யுவராஜ் சிங் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இது கொஞ்சம் தாமதம்தான். இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு இல்லை என்பது எப்போதோ உறுதியாகிவிட்டது.

கவுதம் காம்பீருக்கும் இதே நிலைதான் இருந்தது. அவரும் கடந்த டிசம்பரில்தான் ஓய்வை அறிவித்தார். காம்பீரை தொடர்ந்து தற்போது யுவராஜ் சிங்கும் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ். அவரது துடுப்பாட்டம் காண பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். குறிப்பாக அவர் அடிக்கும் மெகா சிக்ஸர்களுக்கு.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பிராட் பந்துவீச்சில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசியதை ரசிகர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள்.

Previous article700 பேரை கொன்று வீட்டு தோட்டத்தில் புதைத்த பெரும் கோடீஸ்வரர்!
Next articleமுல்லைத்தீவில் குடும்ப பெண்ணிற்கு நேர்ந்த கதி!