தமிழ் சினிமாவில் 90களில் கவர்ச்சியில் கலக்கியவர் விசித்ரா. படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தவருக்கு பட வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கணவர், குழந்தைகள் என செட்டில் ஆனார்.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க முடிவெடுத்திருக்கும் விசித்ரா தனது போட்டோக்களை இணையத்தளங்களில் வெளியிட்டார். இதற்கு ரசிகர் ஒருவர், முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியவங்க. நடிகர் சத்யராஜ்-ஆல் போய்விட்டது என கருத்து தெரிவிக்க, அதற்கு அப்போதே சுடச்சுட, எனது திறமையின் மீது சத்யராஜ் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அந்த வேளையில் வெளிவந்த ஒரேமாதிரியான படங்களின் போக்கு என்னை சில நல்ல பாத்திரங்களை ஏற்கவிடாமல் தடுத்துவிட்டது என பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் சத்யராஜை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் விசித்ரா பேசுகையில், அவர் முதன்முதலாக படத்தை இயக்கும்போது என்னை தேர்ந்தெடுத்தார். நான் அப்போதே கேட்டேன், ஏன் சார் என்னை செலக்ட் பண்ணிங்க என்று. அதற்கு அவர், இல்லம்மா… உனக்கு நல்ல attitude இருக்கு. இந்த கேரக்டருக்கு நல்ல attitude வேண்டும். அதனால உன்னை செலக்ட் பண்ணேன் என்றார். இயக்குனரே செய்ய தயங்கும் விஷயத்தை ஹீரோவான அவர் செய்துள்ளார். அவரை பற்றி சும்மா குறை சொன்னா எப்படி என்னால் பொறுமையாக இருக்க முடியும்.
He is a nice care personality. Life நல்லா இருக்கணும். எல்லாரும் நல்லா இருக்கணும். நானும் நல்லா இருக்கணும், அந்த மாதிரியான கேரக்டர். எதை பற்றியும் கவலைப்படமாட்டார். எல்லாத்தையும் ஈஸியா எடுத்துப்பார் என கூறினார் விசித்ரா.