Home thatstamil one india tamil oneindia tamil தனியாக இருக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்து, வன்புனர்வு செய்யும் சைக்கோ!

தனியாக இருக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்து, வன்புனர்வு செய்யும் சைக்கோ!

0
440

மேற்கு வங்க மாநிலத்தில் தனியாக இருக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்து, பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் 25ம் திகதியன்று புளுல் மாஜி என்கிற 40 வயது பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதும், தலையில் பலமாக தாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அப்போது சிகப்பு நிற பைக்கில் ஒரு நபர் சுற்றி திருவதை அவர்கள் பார்த்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் 42 வயதான சர்க்கார் என்கிற நபரின் புகைப்படத்தை மற்ற காவல்நிலையங்களுக்கும் பொலிஸார் அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று ஜனவரி 27ம் திகதி புஷ்பா தாஸ் என்கிற பெண்ணும், ஏப்ரல் 4-ல் ரிதா ராய் அவரை தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்திலே மமதா கிஷ்கு என்கிற பெண்களும் கொலை செய்யப்பட்டனர்.

அந்த பெண்களும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, வீட்டிலிருந்த நகைகளும் திருடப்பட்டிருந்தன.

இந்த சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டிருந்தார்கள் என்பது தெரியாமல் பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தி, சர்க்காரை கைது செய்தனர்.

அவனிடம் விசாரணை மேற்கொண்டபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான். ஆரம்பத்தில் நகைக்காக தான் பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என கருதியிருந்த வேளையில், அவன் கொடுத்த வாக்குமூலம் பொலிஸாரை அதிரவைத்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், சர்க்காருக்கு திருமணமாகி இரன்டு குழந்தைகள் உள்ளனர். மதிய வேளையில் மின் மீட்டரை கணக்கெடுப்பதாகக் கூறிக்கொண்டு வீடுகளுக்குள் நுழைவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

வீட்டில் ஆள் யாரும் இல்லை என்பது தெரிந்ததும், சைக்கிள் செயினை கொண்டு பெண்களின் கழுத்தை நெரிக்கிறான். இரும்புக்கம்பியை கொண்டு அடித்துவிட்டு, ஏதேனும் ஒரு உடல் பாகத்தில் கூர்மையான ஆயுதத்தை கொண்டு குத்திக்கொலை செய்கிறான். பின்னர் அவர்களை பாலியல் பலத்காரம் செய்துவிட்டு நகைகளுடன் தப்புவதையே அடிக்கடி செய்துவந்துள்ளான்.

இவனுடைய தாக்குதலில் இருந்து பலரும் தப்பியுள்ளார். பெண்கள் மட்டுமே தன்னுடைய முதல் இலக்கு. ஆனால் என்ன காரணத்திற்காக செய்கிறேன் என்பது தனக்கு தெரியவில்லை என கூறியுள்ளான்.

இதில் இன்னும் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். இதேபோன்று சோனி யாதவ் என்கிற பெண் கொல்லப்பட்டுள்ளார். சுவரூபா பீபி என்கிற பெண்ணின் கழுத்தை பின் பக்கத்திலிருந்து நெறிக்க முயலும் போது தப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தில் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தற்போது அந்த நபருக்கு 12 நாள் சிறைக்காவல் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Previous articleவடிவேலுவின் மருமகள் யார் தெரியுமா! பெரிய மனசுதான் நம் நேசமணிக்கு!
Next article30 வயது பெண்ணை கடத்தி சீரழித்து வீடியோ வெளியிட்ட அரக்கர்கள்! நெஞ்சை உருக்கும் சம்பவம்!