Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 30.04.2019 Today rasi palan – 30.04.2019 !

இன்றைய ராசிப்பலன் – 30.04.2019 Today rasi palan – 30.04.2019 !

0
1093

இன்றைய பஞ்சாங்கம்
30-04-2019, சித்திரை 17, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி இரவு 12.18 வரை பின்பு தேய்பிறை துவாதசி. சதயம் நட்சத்திரம் காலை 08.14 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் வழியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் இருந்த தடை தாமதங்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் ஓரளவு குறையும்.

ரிஷபம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும்.

மிதுனம்
இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வண்டி வாகனங்களால் எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

கடகம்
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்வது நல்லது.

சிம்மம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்விக்கான வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மறையும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும்.

கன்னி
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

துலாம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றத்துடன் கூடிய உயர்வுகள் கிடைக்கும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். திடீர் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

தனுசு
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு விரிவடையும். சேமிப்பு உயரும்.

மகரம்
இன்று பிள்ளைகளால் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.
கும்பம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வேலையில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

மீனம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய சற்று யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வியாபாரத்தில் இதுவரை வராத பாக்கிகள் வசூலாகும்.

Previous articleபொலிஸார் அவசர கோரிக்கை – தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்! இவர்களை கண்டால் உடனடியாக தொடர்பு கொள்ளவும்!
Next articleஇலங்கை மீதான தாக்குதலுக்கு காரணம் இதுதான்! ஐ.எஸ் அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள காணொளி !