தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து வருகின்றனர். ஆனால், இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.
ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நயன்தாராவுடன் எப்போதும் திருமணம் என்ற கேள்விக்கு சமீயத்தில் பேட்டி ஒன்றில் விடையளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியின் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்னேஷ் சிவனிடம், நயன்தாரவுடன் எப்போது கல்யாணம் என்று கேள்விகேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், இன்னும் தெரியலயே, தெரிந்தது என்றால் சொல்லலாம் தெரியாத விஷத்தை பற்றி கேட்டால் என்ன சொல்வது. என் கல்யாணத்த பத்தி என்னோட அம்மாகிட்ட கேட்டு உங்களுக்கு சொல்றேன் என்று மழுப்பலான ஒரு பதிலை அளித்துள்ளார்.
மாமியாருடன் செல்பி
அதே போல நடிகை நயன்தாராவும் 100 படத்தில் நடித்த பின்னர் தான் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் தாய் மற்றும் சகோதரியுடன் கொண்டாடியுள்ளார்.