வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வரும் கணவன்! விபரீத முடிவெடுத்த காதல் மனைவி!

0

சென்னையில் காதல் மனைவி இறந்து கிடந்த விவாகரத்தில் மர்மம் இருப்பதாக பெண்ணின் வீட்டார் புகார் தெரிவித்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துரை – சாவித்திரி தம்பதியினரின் மூத்த மகள் சரண்யா என்கிற கார்த்திகா.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு விமல்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.

திருமணத்திற்கு முன்பே விமல்ராஜ் குடும்பத்தினர், 80 சவரன் நகை மற்றும் கார் வரதட்சணையாக கேட்டுள்ளனர்.

ஆனால் கார்திகாவின் பெற்றோர் 55 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.

திருமணம் முடிந்ததிலிருந்தே வரதட்சணை குறைவாக கொடுத்துவிட்டீர்கள் என குறை கூறியதோடு, கார் வாங்கி தருமாறு விமல்ராஜ் குடும்பத்தினர் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

சேலத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் விமல்ராஜ் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் கார்த்திகா தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் விரைந்து வந்த பொழுது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டிருந்துள்ளது.

இதற்கிடையில், நாற்காலியில் அமர்ந்தவாறே கார்த்திகா இறந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கார்த்திகாவின் பெற்றோர், மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதாயுடன் கள்ளக் காதல்! அரசு மருத்துவமனை ஊழியரை போட்டுத் தள்ளிய மகன்!
Next articleஅண்ணியின் தங்கை மீது காதல்! வீட்டிற்கு வரவழைத்து இளைஞர் செய்த செயல்! பகீர் சம்பவம்!