இரவு வேலைக்கு சென்ற கணவன்! மகனுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவி! நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

0

தமிழகத்தில் வீட்டில் இருந்த தாய் மற்றும் மகன் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணியை சேர்ந்தவர் வனபெருமாள் (50). டயர் தொழிற்சாலையில் காவலாளியாக உள்ளார்.

இவரது மனைவி வீரலட்சுமி (45). இவர் மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு பவித்ரா (25) என்ற மகளும், போதிராஜா (10) என்ற மகனும் இருந்தனர். மகள் பவித்ரா திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். மகன் போதிராஜா 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் வனபெருமாள் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் வீரலட்சுமியும், மகன் போதிராஜாவும் இருந்தனர். வேலை முடிந்தவுடன் நேற்று காலை வனபெருமாள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

அங்கு ரத்தவெள்ளத்தில் வீரலட்சுமி மற்றும் போதிராஜா இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வனபெருமாள் கதறி அழுதார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல் இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் கொள்ளையடிக்க முயன்றது.

அப்போது சத்தம் கேட்டு வீரலட்சுமி எழுந்துள்ளார். அவர் தடுக்க முயன்றபோது, வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து வீரலட்சுமியின் கழுத்தில் மர்மநபர்கள் வெட்டியுள்ளனர்.

பின்னர் இரும்பு ஆயுதம் கொண்டு தாக்கி அவரை கொடூரமாக கொலை செய்தனர்.

சத்தம் கேட்டு எழுந்த சிறுவன் போதிராஜாவை இஸ் திரிபெட்டியின் வயரால் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தனர்.

பின்னர் அங்குள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 21 பவுன் தங்கநகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு மர்மகும்பல் தப்பி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து பொலிசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநான் நடிப்பதை தடுத்து நிறுத்த நீங்க யாரு! பொங்கி எழுந்த ராதா ரவி – சர்ச்சைக்கு பதிலடி!
Next articleலண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவிற்கு நேர்ந்த கதி!