இந்த 5 ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலர்களை பழிவாங்காமல் விடமாட்டார்களாம்! ஜாக்கிரதை!

0

நாம் பிறந்த ராசி என்பது உங்களின் ஆளுமைக்கான அடையாளமாகும். ஏனெனில் ஜோதிட சாஸ்திரத்தின் படி நமது பிறந்த ராசிதான் நம்முடைய தலையெழுத்தை தீர்மானிக்கும் அடிப்படை சக்தியாக உள்ளது. நமது நல்ல குணங்கள், கெட்ட குணங்கள், காதல், திருமணம் என அனைத்திற்கும் நம் ராசியுடன் தொடர்புள்ளது. பிறந்த நேரம் மற்றும் நட்சத்திரத்தை பொறுத்து சிறிய மாற்றங்கள் இருக்குமே தவிர பொதுவாக ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அடிப்படை குணம் உள்ளது.

அடிப்படை குணங்கள் என்று வரும்போது அதில் பழிவாங்குவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைவருக்குள்ளும் பழிவாங்கும் எண்ணம் என்பது இருக்கத்தான் செய்யும். ஆனால் அது எந்த அளவிற்கு, யாரை என்பதை பொறுத்துதான் ஒருவரின் நல்ல குணங்கள் தீர்மானிக்கப்படுகிறது. காதல் தோல்வி என்பது இப்போது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. பலரும் அதனை பெரிதாக எடுத்து கொள்வதில்லை, சிலர் அதை நினைத்து கவலைப்படுவார்கள், சிலரோ தங்கள் முன்னாள் காதலரை பழிவாங்க துடிப்பார்கள், பழிவாங்கவும் செய்வார்கள். இந்த பதவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலர்களை தீவிரமாக பழிவாங்குவார்கள் என்று பார்க்கலாம்.

விருச்சிகம்
ஒருவேளை நீங்கள் விருச்சிக ராசிக்காரர்களை ஏமாற்றியிருந்தால் நீங்கள் நிச்சயம் பயந்துதான் ஆகவேண்டும். அதன்பின் அவர்கள் கண்களில் படாமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது. ஏனெனில் அவர்கள் உங்களை பழிவாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள், அதனை ரசிக்கவும் செய்வார்கள். அவர்களுக்குள் இருக்கும் வன்மம் ஒருபோதும் செல்லாது. பார்ப்பதற்கு அவர்கள் சாதாரணமாக இருப்பது போல தோன்றலாம் ஆனால் உண்மையில் அப்படி இருக்காது. பழிவாங்க எவ்வளவு நாட்கள் வேண்டுமென்றாலும் இவர்கள் காத்திருப்பார்கள். நீங்கள் எவ்வளவு கெஞ்சினாலும் அது இவர்களிடம் பலனளிக்காது, பழிவாங்குவது மட்டுமே இவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சியை வழங்கும்.

மேஷம்
இவர்கள் திட்டமிட்டு தங்கள் முன்னாள் காதலரை பழிவாங்குவார்கள். பழிவாங்குவது என்றவுடன் அடிப்பது கொள்வது போன்றெல்லாம் செய்யமாட்டார்கள். இவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக பழிவாங்குவார்கள். பலரும் பார்க்க உங்களை அவமானப்படுத்தி நீங்கள் வெட்கி தலைகுனியும் போது உங்களை பார்த்து சிறிது ரசிப்பார்கள். உங்களுக்கு ஏற்படும் அனைத்து கஷ்டங்களையும் தூரமாக நின்று ரசிப்பார்கள். அவர்களின் வலியை நீங்களும் உணரவேண்டும் என்று நினைப்பார்கள். உங்களின் அவமானம் ஒன்றே அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக இருக்கும்.

மீனம்
இயற்கையிலேயே இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள். இவர்களுடனான உறவை நீங்கள் முறித்து கொண்டால் நீங்கள் நிச்சயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அமைதியானவர்களாகவும், ஆபத்தில்லாதவர்களாகவும் தோன்றலாம். ஆனால் உண்மை அதுவாக நிச்சயம் இருக்காது. அவர்களை காயப்படுத்தி விட்டாலோ அல்லது காதலை முறித்து கொண்டு விட்டாலோ உங்களை பழிவாங்குவதே அவர்கள் வாழ்க்கையின் இலட்சியமாக மாறிவிடும். அவர்கள் உங்களை எப்பொழுதும் மறக்கமாட்டார்கள், உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலை செய்வதே அவர்களின் முதல் வேலையாக இருக்கும். உடனே இல்லாவிட்டாலும் அவர்கள் காதலை முறித்ததற்காக காலம் கடந்தாவது நிச்சயம் பழிவாங்குவார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுடனான உங்கள் காதல் முறிந்து விட்டால் எதையும் சமாளிக்க தயாரா இருந்து கொள்ளுங்கள். பின்வாங்குவது என்பது அவர்கள் அகராதியிலேயே இல்லாத ஒன்று. அவர்கள் எப்பொழுதும் பழிவாங்காமல் ஓயமாட்டார்கள். அவர்களின் உணர்வுகள் காயப்பட்டு விட்டால் அதற்காக பழிவாங்க அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். உங்களை போதுமென்ற அளவிற்கு படுத்தி எடுக்கும்வரை அவர்களின் பழிவாங்கும் தாகம் குறையாது. பழிவாங்கி முடித்தவுடன் மட்டும் அவர்கள் உங்களை மன்னித்து விடுவார்கள் என்று தவறாக நினைத்து விடாதீர்கள். அந்த எண்ணம் ஒருபோதும் மாறாது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ரகசியங்கள் நிறைந்த இவர்கள் தனது எண்ணங்களை மனதிற்குள் வைத்து கொள்வதில் வல்லவர்கள். அதனால் அவர்கள் எப்பொழுது என்ன செய்வார்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. மற்ற ராசிக்காரர்கள் அளவிற்கு இவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் இருக்காது ஆனால் அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை ஒருபோதும் உங்களால் புரிந்து கொள்ள இயலாது. ஒருவேளை உங்கள் காதல் முறிந்து விட்டால் அவர்களின் நடத்தையே வேறுமாதிரி இருக்கும். உங்களை கடுமையாக திட்டுவது, அவமதிப்பது என்று செய்ய தொடங்குவார்கள். ஒரு அளவிற்கு மேல் போர்த்து கொள்ள முடியாத போது பலிவிங் திட்டம் தீட்ட தொடங்குவார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்கள் பிறந்த தேதியின் படி ஆப்பிரிக்க ஜோதிடம் உங்கள் எதிர்காலத்தை பற்றி துல்லியமாக கூறுவது என்ன!
Next articleநீங்கள் பிறந்த நட்சத்திரம் உங்களின் காதல் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது தெரியுமா!