கை ரேகைகளில் பல வகைகள் இருந்தாலும், மிக முக்கியமானவை என கருதப்படும் ஆறு ரேகைகள் தான் ஒருவரின் வாழ்க்கை பற்றிய விடயங்களை குறிக்கிறது.
ஆறு ரேகைகளின் பெயர்களையும், அதன் அர்த்தங்களையும் காண்போம்
யூனியன் வரிகள்
சிறுவிரலின் கீழே இருக்கும் குறுகிய மட்டமான கோடு தான் யூனியன் வரிகள் ஆகும். நெருங்கிய உறவுகள் மற்றும் காதல் வாழ்க்கையை இது குறிக்கிறது.
வீனஸ் வளையம்
இந்த ரேகை சிறுவிரல் மற்றும் மோதிர விரல் இடையே துவங்கி மோதிரவிரல், நடுவிரல் ஊடே வளையமாக ஓடி, மோதிரவிரல் ஆள்காட்டி விரலுக்கு நடுவே முடிகிறது.
இது உணர்வு திறன் மற்றும் ஆளுமையை குறிக்கும்.
சூரிய வரி
மோதிர விரலின் கீழே இந்த ரேகை இருக்கும். ஒருவரின் புகழ் மற்றும் இகழ்ச்சியை இது குறிக்கிறது.
பயண வரி
மணிக்கட்டு மற்றும் இதய ரேகை நடுவே உள்ளங்கையின் அடி மட்டமான கோடுகளாக இது உள்ளது. ஒருவருடைய பயணங்கள் மற்றும் அவற்றின் நீட்சியை குறிக்கிறது.
அப்போலோ வரி
மணிக்கட்டு அருகே உள்ள மேட்டிலிருந்து பயணிக்கும் இந்த ரேகை வாழ்வின் அதிர்ஷ்டத்தை குறிக்கிறது.
மெர்குரி வரி
மணிக்கட்டு அருகே உள்ளங்கையில் துவங்கும் மெர்குரி வரி அதன் சிறுவிரல் நோக்கி பயணிக்கிறது. ஆரோக்கியம், தொழில் அறிவு கூர்மை மற்றும் பேச்சு திறனை இது குறிக்கும்.