படிக்கும் போதே காம வெறியனாக வலம் வந்த திருநாவுக்கரசு- வீடியோ
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/who-is-thirunavukkarasu-youth-arrested-pollachi-sexual-harassment-issue-343812.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=relatedArticles
சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு படிக்கும்போதே கல்லூரியில் காதல் மன்னனாக வலம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. 200-க்கும் மேற்பட்ட பெண்களை அநியாயமாக பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து பெண்களை அவ்வப்போது மிரட்டிய விவகாரத்தில் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற 3 பேர் காதல் வலையில் சிக்க வைக்கும் பெண்களிடம் தனிமையான இடத்துக்கு வரக் கோரி அழைக்கும் பணியை திருநாவுக்கரசு செய்துவந்துள்ளார்.
பண்ணை வீடு
இந்த மிருக கும்பலுக்கு தலைவன்தான் திருநாவுக்கரசு. 27 வயதான இவர் எம்பிஏ படித்துள்ளார். இவருக்கு வசதிக்கு குறைவில்லை. வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறார். சொகுசு கார், பண்ணை வீடு என எதற்கும் பஞ்சமில்லாதவர்.
நுனி நாக்கில் ஆங்கிலம்
ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இவர் கல்லூரியிலும் பல பெண்களுடன் பழகி அவர்களையும் சீரழித்துள்ளதாக கூறப்படுகிறது. படிக்கும் போதே காதல் மன்னனாக வலம் வந்த இவரது நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவது, பார்ப்பதற்கு சினிமா நடிகர் போல் இருப்பது ஆகியவற்றை கொண்டு இளம்பெண்களை மயக்கி காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.
ஃபேக் ஐடி
அது போல் பேஸ்புக்கில் பெண்கள் பெயரில் ஃபேக் ஐடி உருவாக்கி அதன் மூலம் இளம் பெண்களுக்கு பிரெண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து பின்னர் நட்பாகியுள்ளனர். அந்த பெண்களிடம் பாலியல் சந்தேகங்களை எழுப்பும் போது அவர்களும் பெண்கள் என நினைத்து சில விஷயங்களை உளறிவிட்டால் போதும் அதை வைத்தே இந்த கும்பல் அவர்களை மிரட்டிபணிய வைத்துள்ளது.
திருநாவுக்கரசு
எந்த பெண் யாருக்கு சிக்கினாலும் சரி. முதலில் அவர்களிடம் பேச்சு கொடுப்பது திருநாவுக்கரசுதான். தேன் போல் அவர்களிடம் பேசி மயக்குவதில் கில்லாடியான இவர் பாதி பேரை பேசியே வலையில் சிக்க வைத்துள்ளார் என பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.