செல்பி விவகாரம்! ரசிகரை அசிங்கப்படுத்திய தந்தை! நடிகையை அசிங்கப்படுத்திய மகன்!

0
547

செல்பி விவகாரத்தில் கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாத என நடிகர் கார்த்தி ஜூலை காற்றிலே இசை வெளியீட்டு விழாவில் கொந்தளித்தார்.

ஜுலை காற்றில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் பேசுகையில் நடிகர் கார்த்தி செல்பி விவகாரம் தொடர்பாக கொந்தளித்தார் . செல்பி எடுப்பதில் விவஸ்தையே இல்லாமல் போச்சு. அனுமதி இல்லாமல் செல்பி எடுக்கிறார்கள். முன்னாடி இரண்டு பிளாஸ், பின்னாடி இரண்டு பிளாஸ் என அடித்தால் மைக்ரான் இருப்பவர் என்ன ஆவார் என கேள்வி எழுப்பினார்.

முன்னதாக விழாவை தொகுத்து வழங்கிய கஸ்தூரி, கார்த்தியை பேச அழைத்த போது அவருடன் செல்பி எடுப்பது நின்று கிண்டல் செய்தார். கார்த்தியின் தந்தை சிவக்குமாரை கிண்டல் செய்து கஸ்தூரி செல்பி எடுக்க முயன்றதாக தெரிந்தது.

அண்மையில் நடிகர் சிவகுமார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இரண்டு ரசிகர்களின் செல்போனை தட்டி விட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிட்டத்தக்கது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தால் கார்த்தியிடம் மட்டுமின்றி அவரது ரசிகர்களிடமும், நெட்டிசன்களிடம் நேற்று மாலை முழுவதும் திட்டு வாங்கிய கஸ்தூரி ஒருவழியாக ஒரு டுவீட்டை போட்டு சமாளித்தார். அந்த டுவீட்டில் கஸ்தூரி கூறியதாவது:

“ஜூலை காற்றில்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது ஒர்க் அவுட் ஆயிருச்சு. இதை நம்பி கொந்தளிக்கிற எமோஷனல் நபர்கள் கண்டிப்பாக ஜூலை காற்றில் படத்தை என்ஜாய் பண்ணுவீங்க’ என்று கூறி சமாளித்தார்.

இருப்பினும் கார்த்தியின் ரசிகர்கள் கஸ்தூரியை கிண்டல் செய்வதை இன்னும் நிறுத்தவில்லை. பொது இடத்தில் செல்பி எடுக்கும் ஆர்வக்கோளாறில் ரசிகர்கள்தான் இருக்கின்றார்கள் என்றால் ஒரு நடிகையே இப்படி நடந்து அசிங்கப்படலாமா? என்பதே திரையுலகினர்களின் கேள்வியாக உள்ளது.

 

Previous articleவாத்தியார் படத்தில் நடித்த நடிகை மல்லிகா கபூர் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா!
Next articleகுடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேற்றி அல்சரால் வயிற்றில் ஏற்படும் இரத்தக்கசிவுகளை நிறுத்த இத குடிங்க