இதை சாப்பிடலாமா! சாப்பிட்டால் நடப்பது என்ன தெரியுமா!

0

வெந்தயம் பல்வேறு சத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் வெந்தயத்தை தங்களது அன்றாட சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.

பழங்கால மருத்துவ முறையிலும் வெந்தயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனுடைய விதைகள்,இலை எல்லாமே மிகவும் பயனுள்ளதாகும். சாதரண விதைகளை விட அவற்றை முளைகட்டிச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும். மறு நாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும். இவற்றை அப்படியே கூட எடுத்துச்சாப்பிடலாம்.இதனால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

சத்துக்கள்
முளைகட்டிய வெந்தயத்தில் அதிகப்படியான விட்டமின்சி,ப்ரோட்டீன்,நியாசின்,பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் நிறைந்திருக்கும். அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக காணப்படுகிறது.

சர்க்கரை நோயைக் குறைக்கும்
சர்க்கரை நோயாளிகளுக்கு முளைகட்டிய வெந்தயம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திடும்.வெந்தயத்தில் இருக்கும் மூலக்கூறுகளால் உடலில் இன்ஸுலின் சுரப்பு அதிகரிக்கும் அதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும். குறிப்பாக டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனைச் சாப்பிடலாம்.

தொடர்ந்து 24 வாரங்கள் வரை முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வர ரத்தச் சர்க்கரை அளவு குறைந்திடும். வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலம் இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்துகிறது

இதயம்
முளைகட்டிய வெந்தயம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்த்திடலாம். இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துக் கொள்ளும். இதனால் இதயத்தின் செயல்பாட்டில் எவ்வித இடர்பாடுமின்றி தொடரும்.அதோடு இதிலிருக்கும் பொட்டாசியம் நம் உடலில் இருக்கும் சோடியம் அளவை சீராக்கும். இதனால் ரத்த அழுத்தம் முறையாக பராமரிக்கப்படும்.

வைரஸ்
முளைகட்டிய வெந்தயம் வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். குறிப்பாக காய்ச்சல்,தலைவலி போன்றவற்றை உடனடியாக குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது

ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்
இதில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடன் நிறைந்திருக்கிறது. இவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் உடலிலுள்ள செல்களின் வளர்ச்சிக்கு முக்கியப்பங்காற்றுகின்றன.

செரிமானம்
ஆரம்ப காலங்களிலிருந்தே வெந்தயத்தை செரிமானம் தொடர்பான மருத்துவத்திற்கே அதிகம் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். முளைகட்டிய வெந்தயத்தில் அதன் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.வயிறு பொருமல்,அஜீரணம்,வயிற்று வலி,வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு உடனடித் தீர்வு கொடுக்கும்.

தாய்ப்பால்
முளக்கட்டிய வெந்தயத்தில் galactagogou என்ற சத்து இருக்கிறது. இவை பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுக்கிற பெண்கள் தினமும் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

தொப்பை
வெந்தயத்தை ஊற வைத்த நீரை குடித்து வந்தாலோ அல்லது முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டாலோ நல்ல பலன் உண்டு.குறிப்பாக வயிற்றில் அதிகமாக கொழுப்பு சேர்ந்திருப்பவர்கள் தாரளமாக இதனைச் சாப்பிடலாம். முளைகட்டிய வெந்தயத்தில் இருக்கும் மூலக்கூறுகள் தொப்பையை குறைத்திடும்.

எப்படிச் சாப்பிடலாம் ?
எத்தகைய உடல் வாகு கொண்டவராக இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூனுக்கு மேல் சாப்பிடக்கூடாது. முளைகட்டிய வெந்தயம் காலை உணவுக்கு முன்பாக சாப்பிடுவது மிகவும் நல்லது.அதன் கசப்பு சுவை உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.

முளைகட்டிய வெந்தயத்தில் அவ்வளவாக கசப்புத் தெரியாது.குறைந்தது ஒரு மாதம் வரை எடுத்துக் கொண்டால் மட்டுமே சிறந்த பலனை எதிர்ப்பார்க்க முடியும். உணவுகளில் ஏதேனும் ஒவ்வாமை இருந்தால்,வேறு எதாவது நாட்ப்பட்ட நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டிருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅமைதியாக இருந்து ஆளைக் கொல்லும் கல்லீரல் கொழுப்புக்களை சரிசெய்யும் கிராமத்து கை வைத்தியங்கள்!
Next articleஉடல் சூட்டினால் இத்தனை பிரச்சனையா! சூட்டை தணிக்க இதை சாப்பிடுங்க!