Home thatstamil one india tamil oneindia tamil புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன் மகள் பாடிய ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல்!

புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன் மகள் பாடிய ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல்!

0
450

நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமான திரைப்படம் ‘கனா’. இந்த படத்தை நடிகராகவும், பாடகராகவும் அனைவராலும் அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டது.

இந்த படத்தின் மற்றொரு தனி சிறப்பு, இதில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா , ‘வாயாடி பெத்த புள்ள’ என்று தொடங்கும் பாடலை சிவாவுடன் இணைந்து பாடியிருந்தார்.

‘கனா’ படம் வெளியாகும் முன்பே வெளியான இந்த பாடலின் லிரிக்கள் வீடியோ இரண்டே நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அதே போல் ‘கனா’ திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகை என்கிற பெயரை பெற்று தந்தது.

இந்நிலையில் ஆராதனா பாடிய ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் புதிய சதையை படைத்துள்ளது. இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் இதுவரை 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு சாதனை செய்துள்ளது இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகிறார்கள்.

Previous articleவடிவேலுவின் மருமகள் குடும்பம் பற்றி தெரியுமா! தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!
Next articleமீண்டும் பிறந்த அபிநந்தன்!