இருமலுக்கு உடனடி தீர்வு தரும் துளசி விதை!

0
880

துளசி செடி மூலிகை வகைகளில் குறிப்பிடத்தக்க ஒரு இரசாயன கலவைகளில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பண்புகள் உடல் நலம் சார்ந்த நோய்களை குணப்படுத்துவதில் மிகச்சிறந்ததாகும். துளசி மூலிகையில் ஒரியாண்டின் மற்றும் விசெயின் பாலிபினாலிக் ஃபிளவனாய்டுகள் கொண்டுள்ளது.

துளசி இலை உடல் நலம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் ஊக்குவிக்கிறது. யூஜினால், சிட்ரோநெல்லோல், லினாலோல், சித்திரல்,லிமோனின் மற்றும் தேப்பினியோல் போன்ற முக்கியமான எண்ணெய்கள் உடல் சுகாதாரத்திற்கு நன்மை சேர்க்கிறது. இந்த சேர்மங்கள் எதிர்ப்பு சக்தி கொண்ட பாக்டீரியல் பண்புகளை கொண்டிருக்கிறது.

இந்த மூலிகை மிகக் குறைந்த கொ-ழுப்பு சத்துகள் மற்றும் கலோரி வகைகளை கொண்டுள்ளது. இதில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்து பொருட்களான தாதுக்கள் மற்றும் சுகாதாரத்திற்கு இன்னியமையாத வைட்டமின்களை ஆதாரமாக கொண்டுள்ளது

துளசி விதை இன்ஃப்ளூயன்ஸா, மற்றும் காய்ச்சல், குளிர் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கின்றது. இந்த விதை வலிப்பு குறைவு மருந்துகளின் பயன்களை கொண்டுள்ளதால் கக்குவான் இருமல் சிகிச்சைக்கு துளசி விதையை பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுவாக துளசி இருமலுக்கும் குழந்தைகளின் சளித்தொல்லையை போக்கவும் சிறந்தது.

துளசி விதையின் மருத்துவ நன்மைகள்

துளசி விதை வலிப்பு நோயை குணப்படும் மருந்துகளின் பயன்களை கொண்டுள்ளது.

இது கக்குவான் இருமல் போன்ற சிகிச்சைக்கு நல்ல தீர்வினை அளிக்கிறது.

துளசி விதைகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

துளசி விதையில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமான செயல்பாட்டை சீராக்கி, மலச்சிக்கல், வாய்வுத்தொல்லை போன்ற வயிற்று கோளாறு பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்பசியை கட்டுப்படுத்தி, அதிகப்படியான உடல் எடையை குறைக்க துளசி விதை பயன்படுகிறது.

துளசி விதை சளி, காய்ச்சல், இருமல் போன்ற சுவாசம் தொடர்பான நோய்களை குணப்படுத்த சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

தோல் நோய்த் தொற்றுக்கள், புண்கள், வெட்டு காயங்கள் போன்ற தோல் பாதிப்புகளுக்கு துளசியை விதை எண்ணெய் நல்ல பலன் அளிக்கும்.

Previous articleபுகைப்பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க இந்த அற்புதமான பானத்தை குடிங்க!
Next articleதலைமுடி உதிர்வுக்கு தீர்வு தரும் வெங்காய சாறு!