எதிலும் போராடி வெற்றி பெறக் கூடிய ஆற்றலும் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட மகர ராசி நேயர்களே! தற்போது ஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டிலும், கேது 12-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது ஒரளவுக்கு சாதகமான அமைப்பு ஆகும். இதனால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் விலகி மனநிம்மதி உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகளும் படிப்படியாக குறைந்து கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.
சனி 12-ல் சஞ்சரிப்பதால் ஏழரைசனியில் விரயசனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். குரு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிட்டும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு அமையும். 29-10-2019 முதல் குருபகவான் 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்க்கும் உயர்வினை அடைவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வது உத்தமம்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள் சற்றே குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக இருப்பார்கள். மனதில் மகிழ்ச்சி குடி கொள்ளும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.
குடும்பம் பொருளாதாரநிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவதால் அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக கிடைக்கும். குடும்பத் தேவைகள் யாவும் தடையின்றி பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
உத்தியோகம்
பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். தொழிலாளர்களின் ஆதரவுகள் அபிவிருத்தியை பெருக்க உதவும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை மிகவும் முன்னேற்ற கரமானதாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
அரசியல்
பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்க்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் மக்களின் தேவைகளை நிறைவேற்ற நிறைய செலவு செய்வீர்கள். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் பண வரவுகள் சிறப்பாக அமையும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். புதிய நவீன முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உறவினர்களின் ஆதரவு மனநிம்மதி தரும்.
கலைஞர்கள்
எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று உங்களின் நடிப்புத் திறன் வெளிச்சத்திற்கு வரும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுகளால் மனநிறைவு உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார் பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடன் சுமைகள் குறையும். இசைத்துறையில் உள்ளவர்களும் சாதிக்க கூடிய அளவிற்கு வாய்ப்புகள் தேடி வரும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கடன்கள் படிப்படியாக குறையும். சேமிப்பு பெருகும்.
மாணவ மாணவியர்
கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். பொழுது போக்குகளால் கல்வியில் நாட்டம் குறையும்.
ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 6-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 12-ல் கேது உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் குரு 11-ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணம் பல வழிகளில் தேடி வரும். கடன்கள் சற்று குறையும். ஏழரைசனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தமான நிலை உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிக்க கூடிய வலிமையும், வல்லமையும் உண்டாகும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும்.
பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 6-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 12-ல் கேது பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் குரு 11-ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். செல்வம், செல்வாக்கு சேரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன் – மனைவி அனுசரித்து நடந்து கொள்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும்.
புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 6-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 12-ல் கேது பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் குரு 11-ல் சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமாக சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும்.
உற்றார், உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் சற்று குறையும். 29-10-2019 முதல் குரு 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 6-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 12-ல் கேது மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். தினமும் விநாயகரை வழிபடுவது, ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 6-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 12-ல் கேது மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் பணிபுரிய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.
புதிய வாய்ப்புகள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். குடும்ப விஷயங்களை முடிந்தவரை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். குருவுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் எல்லா நன்மையும் கிட்டும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,7,8
கிழமை – சனி, புதன்
திசை – மேற்கு
நிறம் – நீலம், பச்சை
கல் – நீலக்கல்
தெய்வம் -ஐயப்பன்
பரிகாரம்
மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 12-ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை, போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது, சர்ப சாந்தி செய்வதும், விநாயகரை வழிபடுவது நல்லது.
ஏழரை சனி நடைபெறுவதால் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது. திருப்பதி ஏழு மலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கருப்பு நிற ஆடை அணிவது நல்லது.