நடுரோட்டில் உட்கார்ந்து செல்பி எடுத்த தல அஜித்! குஷியில் ரசிகர்கள் தீயாய் பரவும் காட்சி!

0

அல்டிமேட் ஸ்டார் அஜித் சமீபகாலமாக துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருகிறார். அவ்வப்போது அவர் பயிற்சி எடுக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி அரங்கத்தில் தல அஜித்தை பார்த்த ரசிகர்கள் சிலர், நாங்கள் 5 மணி நேரமாக உங்களை பார்ப்பதற்காக காத்திருக்கிறோம் உங்களுடன் ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொள்கிறோம் தல என்று அன்பு தொல்லை செய்தனர் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

கற்றது கையளவு .

கல்லாதது உலகளவு.

திறமைகள் பலவிருந்தும் தலைக்கனமின்றி எல்லோரிடமும் எதார்த்தமாக பழகும் உங்கள் எளிமையே எங்கள் பெருமை‌.

பொதுவாக ரசிகர்கள் புகைப்படம் எடுக்க கேட்டால் பக்குவமாக எடுத்து சொல்லும் அஜித் இந்தமுறை ரசிகர்களை பார்த்து இங்கிருந்து போய் விடுங்கள் என கை எடுத்து கும்பிடு போட்டார். அப்போது விரக்தி அடைந்த அஜித்தின் பயிற்சியாளர் ரசிகர்களிடம், இதற்கு பயந்து கொண்டு தான் அவர் வருவதே இல்லை. அவரை கொஞ்சம் பிராக்டீஸ் எடுக்க விடுங்க என்று கண்டிப்போடு கூறினார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுத்துவிட்டு வெளியே வந்த அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். பிறகு ரசிகர்கள் கேட்டதற்காக நடு ரோட்டில் அமர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார் தல அஜித். இதனால் திருப்தி அடைந்த ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு ட்ரெண்டிங் ஆக்கியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிருமணத்தில் ரஜினியின் ஆட்டத்தைப் பார்த்திருப்பீங்க! ஆனால் அனிரூத், தனுஷ் என்ன செய்தார்கள் தெரியுமா!
Next articleகல்யாண தேதியை அறிவித்த நயன்தாரா! மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன்! எப்போது தெரியுமா!