விஸ்வாசம் படத்தில் நடித்த நடிகை மதுமிதாவுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா.
அதற்கு பின், அட்டகத்தி, இதற்குதனோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களில் நடித்தார். இவர் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார். இந்நிலையில் இவருக்கும் இவரது உறவினர் மோசஸ் ஜோயல் என்பவருக்கும் வரும் 15 ம் தேதி திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோசஸ் தமிழ் திரையுலகில் உதவி இயக்குனராக உள்ளார். சில குறும்படங்களை இயக்கியுள்ள இவர் விரைவில் திரைப்படம் இயக்கவுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: