திருமணம் செய்யாமல் காதலனுடன் சேர்ந்து வாழ்ந்த தமிழ் நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
யாசிகா என்ற 21 வயதான இளம் நடிகை, மன்னர் வகையறா என்ற படத்தில் துணை நடிகையாக நடித்து உள்ளார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து உள்ளார்.
யாசிகாவுக்கு பெரம்பூரை சேர்ந்த அரவிந்த் என்ற மோகன்பாபு (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.
திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் கடந்த 4 மாதங்களாக கணவன்-மனைவி போல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாசிகாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மோகன்பாபு கோவித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் மன வேதனையடைந்த யாசிகா, தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக, “நம்பி வந்த என்னை ஏமாற்றி, திருமணம் செய்து கொள்ளாமல் கொடுமைப்படுத்திய காதலன் மோகன்பாபுவுக்கு, நான் இறந்த பிறகு தக்க தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்” என தனது தாயாருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பொலிசார் விசாரித்து வருகின்றனர்.