10 வருட ஏக்கத்திற்கு பிறகு கிடைத்த பொக்கிஷம்! மகிழ்ச்சியில் சீரியல் நடிகர் ப்ரஜின் வெளியிட்ட புகைப்படம்!

0

சின்னத்தம்பி சீரியல் புகழ் ப்ரஜின், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சாண்ரா கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதனால் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ப்ரஜின். இதைத்தொடர்ந்து, ‘இது ஒரு காதல் கதை’, ‘பெண்’, அஞ்சலி’, காதலிக்க நேரமில்லை’, ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். தற்போது இவர் நடித்து வரும் ‘சின்னத்தம்பி’ சீரியலுக்கு, பல ரசிகர்கள் உள்ளனர்.

சீரியல்களில் நடித்து கொண்டே திரைப்படங்கள் நடிப்பதிலும், கவனம் செலுத்தினார் ப்ரஜின். இதுவரை, டிஷ்யூம், சுற்றுலா, மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய பல படங்களில் நடித்தும் இவரால் இன்னும் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.

இவரை போலவே இவருடைய மனைவியும், மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, கண்ணுக்குள் நிலவு, போராளி, 6 மெழுகு வத்திகள் என 10 திற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். அதேபோல் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்.

ப்ரஜின் தொகுப்பாளராக இருக்கும்போது, தோழியாக இருந்த சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது சாண்ட்ரா கர்ப்பமாக உள்ளார். இதற்காக இவருக்கு சிறந்த நடிகை என பெயர் வாங்கி கொடுத்த பல சீரியல்களில் இருந்து விலகினார். மேலும் தொடர்ந்து நடிக்க வந்த வாய்ப்புகளையும் ஏற்கவில்லை.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலர் தினம் அன்று, சந்தோஷமான செய்தியை கூற உள்ளதாக தெரிவித்தார் ப்ரஜின். அவர் கூறவந்த விஷயத்தை, ஏற்கனவே ரசிகர்கள் யூகித்த நிலையில் சஸ்பென்ஸ் வைக்காமல் தற்போது சாண்ட்ரா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ப்ரஜின். இதை பார்த்து ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவாய் துற்நாற்றம், ஈறுகளில் உண்டாகும் புண்களுக்கு ஏலக்காய் நீர் என சில இயற்கை வழிகள்!
Next articleசூப்பர்ஸ்டாராக இல்லாமல் சவுந்தர்யாவின் தந்தையாக இருந்த ரஜினி! கொடுத்த சீர்வரிசை எவ்வளவு தெரியுமா!