ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 சிம்மம் !

0

வாழ்வில் எதையாவது சாதித்து கொண்டே இருக்க வேண்டும் என்ற லட்சியத்தை கொண்ட சிம்ம ராசி நேயர்களே, இது நாள் வரை 6, 12-ல் சஞ்சரித்த கேது, ராகு வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை உங்கள் ஜென்ம ராசிக்கு 11–ல் ராகுவும் 5-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவீர்கள். 4-ல் குரு, 5-ல் சனி சஞ்சரிப்பதால் குடும்ப வாழ்வில் எதிர்பாராத சிறுசிறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று மேன்மை ஏற்படும்.

குரு 29-10-2019 முதல் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தடைபட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பூர்வீக சொத்து விஷயங்களில் தொடக்கத்தில் சில பிரச்சினைகளை சந்தித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் அமையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் சிறப்பாக அமையும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தி பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்க சற்று தாமதநிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட பணிகளில் தொய்வு ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் தேவையற்ற கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை
கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் குருபெயர்ச்சிக்குப் பின் (29-10-2019) மணமாகாதர்களுக்கு மணமாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார் பங்களா வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர பாக்கியம் அமையும்.

உத்தியோகம்
பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் வாழ்க்கை தரம் உயரும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளு குறையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்றபடி வேலை வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

தொழில் வியாபாரம்
செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். தொழிலாளர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபம் கிட்டும். பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்வீர்கள். போட்டி பொறாமைகள் குறையும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடன் உதவி கிடைக்கும். புதிய யுக்திகளை கையாளும் வாய்ப்பு அமையும்.

கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்ற விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இழுபறி நிலை நீடித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அரசியல்
மேலிடத்தில் உள்ளவர்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் பெயர் புகழுக்கு பங்கம் ஏற்படாது. மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடை பேச்சுகளில் நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். மறைமுக வருவாய் பெருகும்.

விவசாயிகள்
உழைப்பு அதிகமாக இருந்தாலும் பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விட முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். பூமி மனை வாங்கும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

கலைஞர்கள்
கிடைத்த வாய்ப்புகளை கைநழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். சுக வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படவும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். தடைபட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். புத்திர வழியில் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் ஒரளவுக்கு அனுகூலம் கிட்டும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் சாதகமானப் பலன்களைப் பெறுவீர்கள்.

மாணவ மாணவியர்
கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். நல்ல நட்புகளால் பல நன்மைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் நற்பலன் அமையும்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 5-ல் உத்திராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும்.

குடும்பத்தில் தேவையயற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமையும், நிம்மதியும் சிறப்பாகவே இருக்கும். அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற நோக்கங்களும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 5-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் அமையும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம்.

கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும் வாய்ப்பு அமையும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 5-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். முடிந்த வரை அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். 29-10-2019 முதல் 5-ல் குரு சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியகும்.

சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 5-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 5-ல் குரு சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம்.

உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட முடியும். கூட்டாளிகள் தேவையற்ற வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற தடைகள் நிலவினாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்து வருவது நல்லது.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 5-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 5-ல் குரு சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் கிட்டும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நற்பலனை தரும். வெளி வட்டார தொடர்புகளும் விரிவடையும்.

கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கல்வி தரமும் உயர்வடையும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9

நிறம் – வெள்ளை, சிவப்பு

கிழமை – ஞாயிறு, திங்கள்

கல் – மாணிக்கம்

திசை- கிழக்கு

தெய்வம் – சிவன்

பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 5-ல் சஞ்சரிப்பதால் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது. சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது. சர்ப சாந்தி செய்வது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெரிகோஸ் நரம்பு வியாதியை வீட்டிலேயே மூலிகை சாற்றின் மூலம் குணப்படுத்த வழி!
Next articleஹைப்பர் தைராய்டு பிரச்சனையிலிருந்து விடுபட ஓர் இயற்கை நாட்டு மருந்து!