யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்! பொலிஸாரின் விடுமுறை இரத்து!

0

யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் பொலிஸாரின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.

எனினும் இந்த விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பில், யாழ் மாவட்டத்தின் பெரும்பாலான பொலிஸார் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

அதனைக் கட்டுப்படுத்துமாறு பல்வேறு தரப்பினர்களும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தும் பல இடங்களிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதனால் பொலிஸார் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு நிலையிலேயே யாழ். உட்பட வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்றும் ஆகவே இக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் வரையில் பொலிஸாருக்கான விடுமுறைகளையும் இரத்துச் செய்துள்ளார்.

அத்தோடு நத்தார் நிகழ்ச்சி மற்றும் சமூக விரோத கும்பலில் அட்டகாசங்கள் மற்றும் இவற்றுக்கு கட்டுப்படுத்த பொலிஸ் எடுத்த நடவடிக்கையில் திருப்தியில்லை போன்ற மூன்று காரணங்களின் நிமித்தம் நேற்று முன்தினம் முதல் இந்த விடுமுறைகளை மறு அறிவித்தல் வரும் வரைக்கும் இரத்துச் செய்துள்ளார்.

இதேவேளை நேற்று முன்தினம் பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் விடப்பட்ட விடுமுறை இரத்து தொடர்பான அறிவித்தலில் சிறு மாற்றம் செய்து 20 இன்றைய தினமும் அறிவித்தல் விடுத்துள்ளார்.

அதாவது குறிப்பிட்ட சிலருக்கு விடுமுறைகளை வழங்குமுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிருமணம் நிச்சயிக்கப்பட்ட அக்காவை துஸ்பிரயோகம் செய்து கொன்ற அயல் வீட்டு தம்பி!
Next articleவெளியான பரபரப்பான தகவல்! நடிகை ரஞ்சிதாவுடன் ஓட்டம் பிடித்தாரா நித்தியானந்தா!