விஜய்மல்லையாவை நாடு கடத்த லண்டன் கோர்ட் அதிரடி உத்தரவு!

0

பல வங்கிகளில் ரூ.9ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பல வங்கிகளில் ரூ.9ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை வட்டியுடன்திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடிய நிலையில், அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய இந்திய அரசு தீவிரமாக இருந்தது.

இதன் ஒரு பகுதியாக விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று லண்டன் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 10ஆம் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தான் பெற்ற கடன்களை திருப்பி தர சம்மதம் என்று விஜய் மல்லையா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சற்றுமுன் விஜய்மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என லண்டன் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து அவரை இந்தியா கொண்டு வர இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅம்பானி மகளின் திருமண செலவு எத்தனை மில்லியன் டொலர் தெரியுமா? இளவரசி டயானாவின் திருமண செலவை நெருங்கியது!
Next articleமகளின் க.பொ.த சாதாரணதர பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு!