இன்றைய ராசிப்பலன் – 23.11.2018 வெள்ளிக்கிழமை!

0

இன்றைய பஞ்சாங்கம்
23-11-2018, கார்த்திகை 07, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 11.09 வரை பின்பு தேய்பிறை பிரதமை. கிருத்திகை நட்சத்திரம் மாலை 04.41 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் மாலை 04.41 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்திகை. சர்வ ஆலய தீபம் அம்மன் வழிபாடு நல்லது.
இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷம்
இன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும். உடல் நிலை சீராகும்.

மிதுனம்
இன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் ஓரளவு குறையும்.

கடகம்
இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும்.

துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்
இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களுடன் சுமூக உறவு ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு
இன்று நீங்கள் நினைத்த காரியம் எல்லாம் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உங்களது தேவைகள் பூர்த்தியாகும்.

மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

கும்பம்
இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.

மீனம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 22.11.2018 வியாழக்கிழமை !
Next articleகர்ப்பம் தரிக்க நினைப்பவர்களும் அல்லது அதை தள்ளிப்போட நினைப்பவர்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விடையங்கள்!