பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முற்பகல் 11 அளவில் அவருக்கு கட்சியில் இணைந்தமைக்கான அங்கத்துவ அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்ட உறுப்பினர்களுக்கும் அங்கத்துவ அட்டை வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த அங்கத்துவ அட்டை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மும்மொழியிலும் அச்சிடப்பட்டுள்ள குறித்த அட்டையில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிழையின்றி அச்சிடப்பட்டுள்ள போதிலும் தமிழ் மொழியில் உள்ள சொற்கள் பிழையாக அச்சிடப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.