முல்லைத்தீவு – குமுழமுனையில் 36 மணிநேரமாக வெள்ள அனர்த்தத்தில் சிக்கி போராடியவர்களை விமானப்படையினர் இன்று காலை மீட்டுள்ளனர்.
குமுழமுனையிலுள்ள நித்தகை குளம் நேற்றுமுன் தினம் அதிகாலை உடைப்பெடுத்திருந்த நிலையில் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் வெள்ளத்தில் சிக்கியிருந்தனர்.
அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டபோது முதற்கட்டமாக 9 பேர் மீட்கப்பட்டிருந்தனர்.
மீட்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் சிக்கியவர்களை மீட்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவிடம் கோரியும் அவர்கள் இரவு 7.30 மணி வரையும் ஸ்தலத்திற்கு வருகை தரவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க இராணுவம் மற்றும் கடற்படையினர் எடுத்த முயற்சியும் வெற்றியளிக்காத நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் முப்படைகளுக்கும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கும் துரித நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை விமானப் படையினர் உலங்கு வானூர்தி மூலம் அனர்த்தத்தில் சிக்கியவர்களை மீட்டெடுத்துள்ளனர்.